Monday, March 15, 2010

அழகாயிருக்கிறாய்....



மன்றாடிக்கேட்கிறேன் உன்னை
முன்னிரவில் மொட்டைமாடியில் நிற்காதே....
கீழிருந்து பார்க்கும்போது
எது நீ, எது நிலவு என்று குழப்பமாய் இருக்கிறது எனக்கு......



******************************************
******************************************

 


என்னவள்
அழகிப்போட்டியில் பங்கேற்கிறாள்....
போட்டி போட
பூமியில் யாருமில்லை....
நிச்சயம் தோற்றுதான் போவாய்
பரவாயில்லை நிலவே!
பங்கேற்புச் சான்றிதழ் கிடைக்கும்
கீழிறங்கி வா!!!





*******************************************
*******************************************



நிலா
தான்
அழகென்பதை உறுதிசெய்ய
உன்னை உவமையாக கேட்கிறது......


********************************************
********************************************



நிலவுக்கு
தேய்பிறையும் வளர்பிறையும் எதனால் தெரியுமா?
நீ
கர்பத்தில் இருந்தவரை
நிலா
தான் தான் அழகென்ற கர்வத்தில் இருந்தது.
அதனால்தான்
கவலையில் இளைத்தலும்
உன்னை வென்றேதீரவேண்டுமென்று
மறுபடி மறுபடி தடித்தலும்
அதன் குலத்தொழில் ஆனது...


*******************************************
*******************************************
  
 



மின்னலாய் உன் பார்வை...
அது மின்னலென்பதாலோ என்னவோ
ஒரு நொடிக்குமேல் நீடிக்கவேயில்லை...


********************************************
********************************************



நல்லவேளை
பூமி ஒரு பெண்ணென்பதால்
மரம், செடி கொடியெல்லாம் வளர்க்கிறது....
இதுவே ஆணாக இருந்திருந்தால்
நீ பூமிபார்த்து நடக்கும்போது உன்னைப்பார்த்துக்
காதல் அல்லவா வளர்த்திருக்கும்......


*********************************************
*********************************************



நேற்றும் உனதானது இரவு...
புரியலையா???
என் கனவில் நீ வந்தாய் என்பதைச் சொன்னேன்....
என் உடை அழகாக இருக்கிறதா என்று கேட்கிறாய்....
இல்லை என்கிறேன்
உடனே கோபம் கொள்கிறாய்....
ஏ... அழகுப்பிசாசே!
நான் இன்னும் முடிக்கவில்லை
நீ அதைவிட
அழகாயிருக்கிறாய் என்றவுடன் உதடுகடிக்கிறாய்....
கண்விழித்தேன்
கட்டிலுக்கு எதிரே
புன்னகைக்கிறாய்
புகைப்படமாய்........


**********************************************
**********************************************



காதல்!
கற்பனை வாழ்வில் புன்னகைத்துவிட்டு,
நிஜவாழ்க்கையில் ஓலமிட்டு அழுகிறது.....

***********************************************
***********************************************


16 comments:

kovai sathish said...

//நீ பேச தொடங்கியதும்...
உன் அக்காள் 'நிலவு...,'
என்னுடன்
பேசுவதை நிறுத்தி கொண்டாள்..!?//

நிலவை பாடாத கவிஞர் இல்லை...
நீ அதிலும் வித்தியாச படுகிறாய்..?!

ஜெயசீலன் said...

Nandri thozhar Sathish

கிறுக்கனின் கிறுக்கல்கள் said...

என்னவளே
நிலவை தொட வேண்டும்
என்ற-என் சிறு வயது
ஆசை நிறைவேறிவிட்டது
உன்னால்.....
உன்னை
தொட்டு விட்டதால் !!!!!


இப்படிக்கு
உன் ரசிகன்

கிறுக்கனின் கிறுக்கல்கள் said...

ஆஹா ....
நிலா என்னும் உவமை
கொண்டு ....
புகுத்தி விட்டாய்
கவிதையில் புதுமை ஒன்று ....

நிலா ரசிகனே
ஆம்
அழகாய் தான் இருக்கிறது...
உன் கவிதை ....
நிலவை கேட்டதாக சொல் ...

ஜெயசீலன் said...

Nandri shankar...

riyazlines said...

its really superb..... here after am a one of ur fans club..... no words to say this... i admire all poem... wow.. ivalavu ne enga iruntha ullukulla ivalathu vachukitu, really i miss you...

ஜெயசீலன் said...

Thanks Arul....

ஜெயசீலன் said...

Riyaz... un koodathan irundhen... athu apt place illa.... athan... Thanks for visiting and for ur comments....

கபிலன் அருணாசலம் said...

nalla karpanai valam nanbare! Aazhamana porunl niraintha varthaigal. Keep it up

ஜெயசீலன் said...

Marubadiyum Nandri kabilan sir...

Anand said...

//கீழிருந்து பார்க்கும்போது
எது நீ, எது நிலவு என்று குழப்பமாய் இருக்கிறது எனக்கு......
//
அருமையான வரிகள் சீலன்! சில பொண்ணுங்க நிக்கும் போது குழப்பம் வரத்தான் செய்யுது hi hi

Swengnr said...

நிலா உவமை - அற்புதம் கவிதை ! வாழ்த்துக்கள் மேலும் எழுத!

ஜெயசீலன் said...

/Anand said...
//கீழிருந்து பார்க்கும்போது
எது நீ, எது நிலவு என்று குழப்பமாய் இருக்கிறது எனக்கு......
//
அருமையான வரிகள் சீலன்! சில பொண்ணுங்க நிக்கும் போது குழப்பம் வரத்தான் செய்யுது hi hi/

ஆமாம் ஆனந்த்... உங்களின் வருகைக்கு நன்றி....


/Software Engineer said...
நிலா உவமை - அற்புதம் கவிதை ! வாழ்த்துக்கள் மேலும் எழுத!/


நன்றி SE. :)

dsp said...

காதல்!
கற்பனை வாழ்வில் புன்னகைத்துவிட்டு,
நிஜவாழ்க்கையில் ஓலமிட்டு அழுகிறது.....



tis is true line jai..... anubavam pesudho...... but i like tis kavidhai......... unga life la indha madhiri nadandhurukudho... ok... cooooooooooooooooool....dont feel...

prakash said...

Arumaiyana kavithaikal Mr.jaya. I like this... my hearty wishes for ur upcoming.....

t.mallika said...

vaalthukkal