அடியே!
நீ
சமையற்குறிப்பு
நிகழ்ச்சியைத்தான்
தொகுத்து வழங்குகிறாய்...
நேயர் அனைவரும்
அழகுக்குறிப்பு எடுக்கிறார்கள் என்பது
உனக்கு
தெரியுமா
தெரியாதா???
******************************
******************************
அடியே!
இப்போதெல்லாம்
நீ
உதட்டுச் சாயம் பூசிக்கொண்டு
இதழ் மறைக்கிறாயாமே...
அந்த
தேனியும்,
வண்ணத்துப்பூச்சியும்
புலம்புவது
மெய்யா???
******************************
******************************
அடியே!
நீ
ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
அம்மரம்
பூப்படைந்துவிட்டதாமே!!!
என்ன செய்தாய்???
******************************
******************************
அடியே!
மருதாணியிடச் சொல்லிவிட்டு
விரல் பிடித்ததுமே
சிவந்துபோனால் எப்படி???
11 comments:
unga kavidhaigal la naan romba rasichadhu :)
hmmmm good work sir :)
nandri rasigan...
அடடே நல்லாருக்கே...
ha ha...
Nandri pulavare...
blood vara matiri pidicha sivanthu than pa pogum
hahaha niraiya karpanai valam. keep it up jai
thank u kabilan sir....
// அடியே!
மருதாணியிடச் சொல்லிவிட்டு
விரல் பிடித்ததுமே
சிவந்துபோனால் எப்படி??? //
இது Class..!
அழகான ஒரு லவ் இருக்கு...
மற்றதில் உங்க புத்திசாலித்தனமான வலிந்து யோசித்த சிந்தனை இருக்கு...
அந்த லவ் மிஸ் ஆகுது...
தொடர்ந்து எழுதுங்க..
வாழ்த்துக்கள்..!
:)
அடியே!
நீ
ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
அம்மரம்
பூப்படைந்துவிட்டதாமே!!!
என்ன செய்தாய்???
this is too much?.....
/dsp said...
அடியே!
நீ
ஊஞ்சல் கட்டி
ஆடியதும்
அம்மரம்
பூப்படைந்துவிட்டதாமே!!!
என்ன செய்தாய்???
this is too much?...../
கவிதைல எதுவுமே too much இல்ல DSP
sir this one is so cute....
awesome kavithai....
I amazed....
இப்படி கூட ரசிக்கலாமா...!!!!!!!!
Post a Comment