ஊடலின் வெப்பமும்
உள் விளைந்த
தனிமையின் மொத்தமும்
அன்றைய மழைக்காரணங்கள்...
வழக்கமாய்
ச்சோ! எனப் பெய்யும் மழை
அச்சச்சோ! எனப் பெய்வதாகவும்...
தழைகளினூடே
துளிகளைச் சிந்தி
தருக்கள் அழுவதாகவும்...
அதனினூடே
அவைகள்
அனுதாபிப்பதாகவும்
ஆறுதல் பட்டது மனது!!!
தேவ தேவி!
நின்
நினைப்பில் நனைவதைப்போலவே தொப்பலாய்
நனைந்துவிட்டேன் மழையிலும்...
குடைபிடித்து வானம் வருமா???
வரும்!!!
வந்தாய் நீ!!!
முற்றிலும் நனைந்த போதும்
இப்போது உன் குடை தேடியது மனது!!!
சூரியன் வருவதை
விரும்பாதிருக்காது வானம்...
ஏனோ
அம்முறை விரும்பவில்லை நீ!!!
ஆயினும்
வந்தே தீரும் சூரியன்!!!
குடைக்குள் நாம்!!!
அடுத்தடுத்த
உரசல்களில் உருவான
மின்சாரப் பாய்ச்சலில் நீயும்...
இதுவும்
ஊடல் விளைவிக்குமோ! என்ற
ஐயத்தில் நானும்...
பதைபதைத்துக்கொண்டே
பயணம் நீண்டது...
மகிழ்வுந்தோன்று தேரில் சேர் தெளித்ததும்
காற்று குடை கவர்ந்ததும்
மழை உன்னை திருமுழுக்கிட்டதும்
மின்னல் நம்மை பிணைத்திட்டதும்
உடனே ஊடல் விரட்டப்பட்டதும்
இக்கவிதை காரணங்கள்...
நன்றி யூத்புல் விகடன்
http://youthful.vikatan.com/youth/Nyouth/jayaseelanpoem040610.asp
23 comments:
ஹ்ம்ம் அடிக்கடி நல்ல காற்றுடன் கூடிய மழை பெய்ய கடவது .தோழி குடை கொண்டுவராத நாட்களில் !!!
வாழ்த்துக்கள்
Nandri padma...
காரணமில்லாமல் காரியம் இல்லையன்றோ??
எழுத்துக்களின் மீதான காதலும், தேடலும் கவிதையின் காரணமாய் இருப்பது, எனதன்பின் நண்ப... மிக்க மகிழ்ச்சியே... வெளிப்பாட்டில் நல்ல முன்னேற்றம்...!
nandri Nanba... sandhosama irukken....
அருமையான நடை! அசத்தலான லாவகம்! உன்னிடம் வார்த்தைகள் ஒவ்வொன்றும் பூமியில் மழைத்துளி போல் தானே வந்து விழுகின்றன! மழை வந்தாலே காற்றும் வரும்! உன் கவிதை மழை வந்தாலே காதல் வரும்! இன்னும் இன்னும் மழை பெய்யட்டும்!
நன்றி நண்பா...
உங்களின் வாழ்த்துக்கு கடமை பட்டிருக்கிறேன்....
அருமை நண்பரே, தங்கள் கவிதையில் மெருகூட்டல் நன்றாக தெரிகிறது. வாழ்த்துக்கள்.
நண்பரே, மீண்டும் ஒரு முறை தங்களின் அனைத்து கவிதைகளையும் ஒரு முறை வாசித்து விட்டேன். காதல் என்னும் வலைக்கு செல்லும் போதே மெய் சிலிர்க்க வைக்கும் படி எழுதுங்கள்.
ம்ம்
நல்லா இருக்குங்க !
@ கபிலன், நன்றி சர்... முயற்சிக்கிறேன்...... :)
@ நேசமித்திரன்,
இந்த விமர்சனத்துக்கு ரொம்ப நன்றி சர்......
உங்கள் வருகைக்கு
ரொம்ப ரொம்ப நன்றி சர்.... என் பாக்கியம்... :)
நல்ல கவிதை..
பாராட்டுக்கள் ... தொடர்ந்து எழுதுங்கள் ..
Word verification தூக்கி விடுங்கள்...
நன்றி செந்தில்....
//////சூரியன் வருவதை
விரும்பாதிருக்காது வானம்...
ஏனோ
அம்முறை விரும்பவில்லை நீ!!!
ஆயினும்
வந்தே தீரும் சூரியன்!!!
//////
நம்பிக்கை தெறிக்கிறது வார்த்தைகளில் . நல்ல இருக்கு நண்பரே
@!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫
நன்றி நண்பா!!!
அடுத்தடுத்த
உரசல்களில் உருவான
மின்சாரப் பாய்ச்சலில் நீயும்...
இதுவும்
ஊடல் விளைவிக்குமோ! என்ற
ஐயத்தில் நானும்...///
The best of urs!
oru muzhu kavidhaikkaana thagudhi.. indha kavidhai moolamaa ungalukku kidachiduchu...
ipdiye indha frequency la.. konja naal maintain pannunga... idhula nallaa strong aanadhum.. veru kalathirku sellalaam...
jus amazed at this poem... master piece!:)
Cheers,
Rasigan
நன்றி ரசிகன்...
இதற்க்கு தங்களுடைய ஊக்கமும் உந்துதலும் ஒரு முக்கிய காரணம்...
நிச்சயம் முயற்சிப்பேன்...
காரணங்களை நோக்கி பயணிக்கும் கவிதை... ' யூத்புல் விகடனில் ' வெளிவந்திருந்தது...
வாழ்த்துக்கள்...ஜெயசீலன்...
நன்றி இளங்கோ சார்....
நல்ல கவிதை ! கவிதைக்கு காரணமான அந்த பெண் யாரு வாத்தியாரே
அருமை... அருமை ... நண்பா., இது கவிதை...! அடடா... இந்த சுகம் எங்கு கிடைக்கும்.... அந்த மழையும்.... அன்பு காதலியும்.... இன்னும் மழை பெய்திருக்கலாமோ.... என எண்ணத் தோன்றுகிறது.
# தழைகளினூடே
துளிகளைச் சிந்தி
தருக்கள் அழுவதாகவும்...
# மகிழ்வுந்தோன்று தேரில் சேர் தெளித்ததும்.....
இந்த வரியில்..."மகிழ்வுந்தொன்று" என மாற்றிக் கொள்ளவும்.
அசத்தல் கவிதைக்கு நன்றி ஜெயசீலன்.
நல்ல கவிதை.. பாராட்டுக்கள் ...
உங்கள் கவிதை மழையில் நானும் நனைந்தேன்.....
அருமை.....
அருமை.....
பாராட்டுக்கள்....
sirrrrrr
kalakiteenga sirrrrr.....
உங்கள் கவிதைகள் பல படித்தேன்..., அனைத்திலும் கற்பனை அருவி கொட்டுகிறது..., அவை என்னை ஆச்சரியத்துக்குள்ளாக்கியது...
உங்கள் கவிதை தொகுப்பைக் கையில் ஏந்தக் காத்திருக்கிறேன்.., விரைவில் வெளியிடுங்கள்.....
Post a Comment