Wednesday, March 31, 2010

களவு



ஆத்துமணலின்


அக்கரையில் பள்ளிக்கூடம்.


கணக்குப் பாடம் பழக


வழி நெடுக பலாமரம்...






அதென்னமோ


அந்த வயசுல


அறுசுவையும்


பலாச்சுவைதான்...






வேலிசாஞ்சி


எட்டிக் கைதூக்கி


பலாக்காயை தொட்டிருக்கோம்.


காவக்காரன் பாத்துட்டான்னா


பிரம்பு மொழி கேட்டிருக்கோம்...






மொதலாளி தந்த பாய் பயத்தவிட


இருள் தந்த பேய் பயத்தால


காவக்காரன் தூங்கிட்டான்.


களவாட துணிஞ்சிட்டோம்...






ஒன்னு பத்தாதுன்னு


நாலு பறிச்சோம்.


காயை கனியாக்க


ஆத்து மணலுல புதைச்சோம்...






காலையில


கையில கம்போட


காவக்காரன்


கெட்ட கெட்ட வார்த்தையில திட்டிகிட்டு இருந்தான்.






மனசுக்குள்ள நாங்களும்


திட்டிகிட்டுதான் இருந்தோம்.


ஆத்துமணல களவாடின-அந்த


கெட்ட கெட்ட வார்த்தைக்குரியவன நெனச்சு......








9 comments:

ரசிகன்! said...

hey man... simply superb....

extraordinary one from u!!!

loved the slang u used :)

ஜெயசீலன் said...

thanks durai...

புலவன் புலிகேசி said...

nice one...

ஜெயசீலன் said...

Nandri nanba...

கபிலன் அருணாசலம் said...

hahaha. good

ஜெயசீலன் said...

Nandri sir...

Unknown said...

எழுந்து நின்று கை தட்டத் தோன்றியது ஜெயசீலன்..!
அத்தனை அழகாய் வட்டாரக் கவி மொழிக்குள் அடர்த்தியான ஒரு லாவகத்தைக் கொண்டு வந்துட்டீங்க..

கனமான விஷயம்..

அப்ளாஸ்..!!!!

ஜெயசீலன் said...

நன்றி இளங்கோ சார்...

Unknown said...

Really Good Sir .....
Expecting more from u sir :)