Friday, August 27, 2010

ஜல்லிக்கட்டு





தோல்வியெனில்
ஒரு திமிரலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!!


வெற்றியெனில்
திமில் பிடித்தலுக்கும்,
மண்டியிடச்செய்தலுக்கும் அல்லது எல்லைக்கோடு அடைதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் பயணம்
எம் களம்!!!


களமாடிக் களைக்கும்போது
கூட்டத்தின் கூச்சல்கள்
எமக்கு உற்சாகம்...
காளைக்கு மிரட்சி...


வாடிவாசல் புறப்படும்
கொம்பு சீவிய
குடிகார காளையை
வால்பிடித்தோ இல்லை திமில்பிடித்தோ
தூக்கியெறியப்படும் வேளைகளில்
பரணிலிருக்கும் காளைக்காரனின்
வெடிச்சிரிப்பிலும் மீசை முறுக்களிலும்
வெளிப்படும் அவன் வெற்றி...

மாறாக
பற்கள் கடித்தலிலும் கொச்சயாய் ஏசுதலிலும்
வெளிப்படும் எம் வெற்றி...


பாவம் காளைகள்
மீசை முறுக்கலில் அதற்கு வெற்றியுமில்லை...
கொச்சை வார்த்தை ஏசலில் தோல்வியுமில்லை..


இக்கதி முடிவில்
யாம் பெற்ற சன்மானம்
இரண்டாயிரம் ரூபாய்...


கோடித்துணி
வாய்க்கரிசி
மேலும் சில சேர்த்து
எம் மாமன்
எமக்கெனச் செய்த செலவு மூவாயிரம் ரூபாய்...!!!


27 comments:

வினோ said...

நல்லா இருக்குங்க ஜெயசீலன்...

ஜெயசீலன் said...

நன்றி நண்பா...

Unknown said...

கவிதை மிகச்சிறப்பு தம்பி. தொடருங்கள்.

Anonymous said...

idhu irndhavan ezhudhiya...kavidhayada....

kaalai...unmayagave oru appavi dhanda...
super...

siva balan said...

idhu irndhavan ezhudhiya...kavidhayada....

kaalai...unmayagave oru appavi dhanda...
super...

Anonymous said...

ur kalai kavidhai is very super....... then ur all kavidhai is very nice........ thavani kavidhai very superb.......

dsp said...

ur cell phone kavidhai very nice...
feel pannadhinga...

rbharathi said...

kaalai.....superb...kavithaiyin mudivu arumai....All the best....

சிவாஜி சங்கர் said...

நண்பா........
இதை ஒரு பரத்தையின் நிலையில் படித்தேன்....

:)

கவிதை நன்று..

பத்மா said...

உணர்வுப் பின்னல்

ஜெயசீலன் said...

/SIVA said...
கவிதை மிகச்சிறப்பு தம்பி. தொடருங்கள்./

நன்றி தமிழாசிரியரே.... :)

/siva balan said...
idhu irndhavan ezhudhiya...kavidhayada....

kaalai...unmayagave oru appavi dhanda...
super.../

கவிஞர் இளங்கோ சொல்வார் "ஒரு கவிதை எதன் அல்லது யார் பார்வையிலிருந்து எழுதப்படுகிறது என்று பார்க்கவேண்டும் " என்று.... இந்தக்கவிதையை இறந்தவன் பார்வையிலிருந்து எழுதி இருக்கிறேன்.... உன் முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி டா மச்சி...

/Anonymous said...
ur kalai kavidhai is very super....... then ur all kavidhai is very nice........ thavani kavidhai very superb......./

நன்றி அனானி...


/dsp said...
ur cell phone kavidhai very nice...
feel pannadhinga.../

முதல் வருகைக்கும், பின்னூட்டத்திற்கும், என் மீதான அக்கறைக்கும் நன்றி DSP.

/rbharathi said...
kaalai.....superb...kavithaiyin mudivu arumai....All the best..../

நன்றி பாரதி....
பாரதி என்றால் சரஸ்வதின்னு பொருள்...

/Sivaji Sankar said...
நண்பா........
இதை ஒரு பரத்தையின் நிலையில் படித்தேன்....

:)

கவிதை நன்று../

நண்பா கவிதை என்றல் என்ன என்று நண்பர்கள் புகட்டிய ஞானம் என்னை இதுவரை பயணப்பட வைத்திருக்கிறது... அந்த நண்பர்களில் முக்கிய இடத்தில் முதன்மையாய் நீ இருந்திருக்கிறாய்... வா... இன்னும் பயணப்படச்செய்....

நீ எனக்கனுப்பிய காளை VS பரத்தை mail சூப்பர்...

/பத்மா said...
உணர்வுப் பின்னல்/

நன்றி பத்மா....

August 29, 2010 7:42 AM

Abhi said...

மிக மிக அருமை ஜெய்! நீங்கள் எழுதியதிலேயே எனக்குப் பிடித்த கவிதை இதுதான்! வாழ்த்துக்கள் நண்பா!

ஜெயசீலன் said...

நன்றி அபி... விரைவில் மூன்றாம் கோணத்திற்கு வருகிறேன்...

க.பாலாசி said...

அதென்னமோ நெஜந்தானுங்க செயசீலன். எல்லாம் ஒரு வரட்டு கௌரவத்துக்காக என்றாகிவிட்டது.

நல்ல கவிதை..

Haiku charles said...

Nandru

SINTHIYA said...

ungala mathiri ellarum yosicha nalla irukkum jey.....super ah irukku

Ahamed irshad said...

கடைசி பாரா அருமை..

Unknown said...

அன்பு ஜெயசீலன்..!
ஜல்லிக்கட்டின் ( உங்கள் கவிதையின் ) உள்ளடக்கம்... ஒரு உயிர்ப்பை தனக்குள் தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளது.
அது தமிழரின் நூற்றாண்டுக் கால வீரச் செறிவின் மிச்சம்..

// தோல்வியெனில்
ஒரு திமிறலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!! //

நறுக்கென்று சொல்லப்பட்ட வரிகள்..
கவிதையின் இறுதி வடிவத்துக்குள் ஒரு திருப்புமுனை அமைத்து...இறந்தவன் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கவிதையாக மாற்றி விட்டீர்கள்...
அது வரை பின்தொடர்ந்து வந்த கவிதையின் போக்கை வாசகன் மாற்றியமைத்து அதிசயிக்கும் வாசிப்பை அடைகிறான்..
அது உங்கள் சூட்சமத்தின் வெற்றி.
வாழ்த்துக்கள்...
கவிதைக்குள் இரண்டு கவித்தன்மைகளைக் கண்டுகொண்டேன்...
அது வேறு ஒரு பாய்ச்சலை பாய்ந்திருக்கிறது...

// பாவம் காளைகள்
மீசை முறுக்கலில் அதற்கு வெற்றியுமில்லை...
கொச்சை வார்த்தை ஏசலில் தோல்வியுமில்லை..//

இந்த வரிகள் உங்கள் இறுதி ட்விஸ்ட்டில் மயங்கும் வாசகர் ஜஸ்ட் லைக் தட் கடந்து போய்விடும் வரிகளாகவே தோணும்..
ஆனால்...
இந்த வரிகளில் கவிதையின் உயிர்ப்பு..பன்மடங்கு பெருகி காட்டாறாக மனதுக்குள் ஓடுகிறது..
ஒரு கவிதையின் உன்னதமான கவலை...அங்கே என்னை நிறுத்தி...எனக்குள் என்னைத் திருப்பி அனுப்பும் வேலையை செம்மையாக செய்திருப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது..
கவிஞர்களை மீறி வெளிப்பட்டுவிடும் கவித்தன்மைகளையும் படிமக் கூறுகளையும் தன்னகத்தே தேக்கிவைக்கும் அற்புதம்...கவிதைக்குள் எப்போதும் நடப்பது உண்டு... ( அதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன் )

( நூற்றாண்டுக் கால தமிழர் வீரத்தை சொல்லும்போதே...இன்னொரு உயிரின் பதற்றத்தை அதன் இறுதி அவலத்தை கவிதை காளையின் கோணத்தில் சொல்லி முடித்துவிடுகிறதே...- இது உலகத் தரம்..)

( இறந்தவன் பார்வையில் விரிந்த கவிதை..உங்களுக்கு பலத்த கைத்தட்டலை வாங்கித் தரும்...) It's a glimpse. அவ்வளவு தான்..

ஜெயசீலன்..!
அது இதில் நடந்திருக்கிறது...
என் கண்ணில் பட்டதை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது..
நன்றி..!
( மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்..)

Unknown said...

அன்பு ஜெயசீலன்..!
ஜல்லிக்கட்டின் ( உங்கள் கவிதையின் ) உள்ளடக்கம்... ஒரு உயிர்ப்பை தனக்குள் தாங்கிப் பிடித்துக்கொண்டுள்ளது.
அது தமிழரின் நூற்றாண்டுக் கால வீரச் செறிவின் மிச்சம்..

// தோல்வியெனில்
ஒரு திமிறலுக்கும்,
எறியப்படுதலுக்கும் அல்லது சொருகப்படுதலுக்கும்
இடைப்பட்ட
நேர அல்லது தூரப் போராட்டம்
எம் களம்!!! //

நறுக்கென்று சொல்லப்பட்ட வரிகள்..
கவிதையின் இறுதி வடிவத்துக்குள் ஒரு திருப்புமுனை அமைத்து...இறந்தவன் பார்வையிலிருந்து எழுதப்பட்ட கவிதையாக மாற்றி விட்டீர்கள்...
அது வரை பின்தொடர்ந்து வந்த கவிதையின் போக்கை வாசகன் மாற்றியமைத்து அதிசயிக்கும் வாசிப்பை அடைகிறான்..
அது உங்கள் சூட்சமத்தின் வெற்றி.
வாழ்த்துக்கள்...
கவிதைக்குள் இரண்டு கவித்தன்மைகளைக் கண்டுகொண்டேன்...
அது வேறு ஒரு பாய்ச்சலை பாய்ந்திருக்கிறது...

ஜெயசீலன் said...

இளங்கோ சார், இதை நான் எதிர்பார்க்கவே இல்லை...
உங்களின் வாழ்த்து எனக்கு பேரானந்தத்தையும் ஊக்கத்தையும் அளிக்கிறது.
எனக்கு இதுவரை கிடைத்த பரிசுகளிலேயே இதுதான் அளப்பெரியது....
இந்த வாழ்த்தை என் அப்பாவிற்கு சமர்ப்பிக்கிறேன்...
குடையாடக் கிடக்கும் வானத்தை
நன்றியாக்கிப் போர்த்தியிருக்கிறேன்....
பெற்றுக்கொள்ளுங்கள்.... வணக்கம்.

ஜெயசீலன் said...

//க.பாலாசி said...
அதென்னமோ நெஜந்தானுங்க செயசீலன். எல்லாம் ஒரு வரட்டு கௌரவத்துக்காக என்றாகிவிட்டது.

நல்ல கவிதை..//

நன்றி பாலாசி...



// Haiku charles said...
நன்று//
முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சார்லஸ்...



//sinthiya said...
ungala mathiri ellarum yosicha nalla irukkum jey.....super ah இருக்கு//

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி சிந்தியா.



//அஹமது இர்ஷாத் said...
கடைசி பாரா அருமை.//

முதல் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி அஹமது இர்ஷாத்...

ஷஹி said...

அடேங்கப்பா!தங்கள் கவித்திறனும், வார்த்தைச்செறிவும்,களம் குறித்த நுண்மையும் பொறாமை கொள்ளச்செய்கிறது நண்பரே....வாழ்த்துக்கள்!

ஜெயசீலன் said...

நன்றி ஷஹி...

புலவன் புலிகேசி said...

good one

ஜெயசீலன் said...

நன்றி புலி

தமிழ்க்காதலன் said...

பின்னிட்டீங்க ஜெயா... கொடுமையை சொன்ன விதம் அருமை. மனித மிருகங்களின் மிருகவதைக்கு உள்ளாகும் மிருகம் படும் பாடு... அய்யோ.. சொல்லி மாளாது. நிறுத்தட்டும் மானுடம் மிருகவதை.
# திருத்தம்... "திமில்" என்பது சரி. "திமிழ்" என வராது. கவனியுங்கள்.

ஜெயசீலன் said...

@ஆனந்த்
நன்றி தம்பி....

@தமிழ்க் காதலன்

நன்றி நண்பா... நிச்சயம் திருத்திக்கொள்கிறேன்... உங்களின் முதல் வருகைக்கும் ஊக்கப்படுத்துகிற மாதிரியான பின்னூட்டத்திற்கும் நன்றி...