Thursday, November 25, 2010

நானிங்கு சுகமில்லை... நீ???

வாய் நிறைத்த இரையோடு
வெறும் கூட்டை வந்துசேரும்
தாய்க்குருவிக்குத் தொற்றிக்கொள்ளும்
பதற்றம் போல் இப்போது 
நீ பிரிந்த எனக்கும்!
நானிங்கு சுகமில்லை... நீ???


கடற்தொலைத்த மோதிரத்தை
அலைமூழ்கி மணலெடுத்து
அது அகப்படும் கைப்பிடிக்காய் 
மூழ்கி மூழ்கிக் கண்சிவப்பது போல் இப்போது
உனை தொலைத்த நானும்!!
நானிங்கு சுகமில்லை... நீ???


உன் கரம் கோர்க்கா பயணங்களில்
நெருஞ்சிமுள் செருப்புகள்!
உன் கைபடா புசித்தலில்
கொடுந்தேளின் விஷம்!!
உன் உரசலில்லா இரவுகளில்
உருக்கிரும்பின் மெய்வருடல்!!!
உன் பாத்திரமில்லா கனவுகளில் 
நிழல் விழா மானுடர்கள்!!!
நானிங்கு சுகமில்லை... நீ???நினைவிருக்கிறதா தேவி!
என் நடப்பு அகவையின் முதல் நாளில் 
உனக்கென்ன வேண்டும் எனக்கேட்டாய்.
உடனே நான்
இனிவரும் யுகங்கள் முழுக்க
உன் இதழ் பட வாழ்தல் வேண்டுமென்றேன்!
ஒரு கணம் நீ சொக்கிப்போய் 
என் விழி ஊடுருவி சம்மதம் சொல்லிவிட்டு
உடனே தெளிவடைந்தவளாய் வெட்கி 
என் புறங்கையில் மழைபொழிந்துவிட்டு
திருமணம் வரை இசை பட வாழ் என்றாய்!

நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்
உன் சிரிப்பில்லை
உன் அதட்டலில்லை
உன் பரிகாசமில்லை
உன் திட்டலில்லை
உன் உரசலில்லை
உன் எச்சிலில்லை
உனை பிரியும் நேரங்களில்
வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்?


அறிவாய் என் நாயகி!
நீயென் உப்பு!
நீயென் குருதி!
நீயென் நீர்!
நீயென் சத்து!
நீயென் ஊழ்!
உன் பிரிவு எனக்கு அமிலக்குளியல்!!!


தேவி உன் பிரிவில்
தொங்கும் வௌவாலின் 
தலைகீழ் கோணமாய்
மாறிவிட்டதடி என் உலகம்!


சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி 
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ??? [கிரியாயூக்கி சிவாஜி சங்கருக்கு(http://sivajisiragukal.blogspot.com/) சமர்ப்பணம்]


44 comments:

வினோ said...

பிரிதல் இப்படி தான் வலிக்கும் நண்பா....

kabilan said...

வலி என்பது பிரியும் போதும் எதிர் நோக்கி காத்து இருக்கும் போதும் வலியின் வேதனை புரியும்., கண்ட பின்னர் வலியின் வேதனையோ வலியோ தெரியாது.

kabilan said...

வலி என்பது பிரியும் போதும் எதிர் நோக்கி காத்து இருக்கும் போதும் வலியின் வேதனை புரியும்., கண்ட பின்னர் வலியின் வேதனையோ வலியோ தெரியாது.

ஜெயசீலன் said...

//வினோ said...
பிரிதல் இப்படி தான் வலிக்கும் நண்பா....//
ஆமாம் ... இப்படிதான் வலிக்கும்.... நன்றி நண்பா...

ஜெயசீலன் said...

//kabilan said...
வலி என்பது பிரியும் போதும் எதிர் நோக்கி காத்து இருக்கும் போதும் வலியின் வேதனை புரியும்., கண்ட பின்னர் வலியின் வேதனையோ வலியோ தெரியாது.//
நன்றி கபிலன் சார்...

பதிவுலகில் பாபு said...

உணர்வு பூர்வமான வரிகள்.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..

ஜெயசீலன் said...

//பதிவுலகில் பாபு said...
உணர்வு பூர்வமான வரிகள்.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..//

மிக்க நன்றி பாபு...

Anonymous said...

உங்கள் கவிதைப் பயணம் சிறக்க என் வாழ்த்துக்கள்.

ஜெயசீலன் said...

நன்றி தமிழ்நேசன் சார்...

rasigan said...

உணர / உணர்த்த துவங்கி விடுகின்றன கடைசி இரு பத்திகள்!

கொஞ்சம் பதற்றம்
நிறைய பிரிவு!

///நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்
உன் சிரிப்பில்லை
உன் அதட்டலில்லை
உன் பரிகாசமில்லை
உன் திட்டலில்லை
உன் உரசலில்லை
உன் எச்சிலில்லை
உனை பிரியும் நேரங்களில்
வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்...///

முழுமையான உணர்வின் வெளிப்பாடு!

மெருகேறியிருக்கும் வரிகள்.... தொடர என் வாழ்த்துக்கள்!

நேசமித்ரன் said...

தம்பி சிவாஜிக்கு சமர்ப்பணமா .. ம்ம் சந்தோஷம்.

வாழ்த்துகள் ஜெயசீலன் . இந்த கவிதைக்கான புகைப்படம் எனக்கும் பிடித்து பயன்படுத்தி இருக்கிறேன் வெகு காலம் முன்பு :)

ஜெயசீலன் said...

// rasigan said...
உணர / உணர்த்த துவங்கி விடுகின்றன கடைசி இரு பத்திகள்!

கொஞ்சம் பதற்றம்
நிறைய பிரிவு!

///நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்
உன் சிரிப்பில்லை
உன் அதட்டலில்லை
உன் பரிகாசமில்லை
உன் திட்டலில்லை
உன் உரசலில்லை
உன் எச்சிலில்லை
உனை பிரியும் நேரங்களில்
வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்...///

முழுமையான உணர்வின் வெளிப்பாடு!

மெருகேறியிருக்கும் வரிகள்.... தொடர என் வாழ்த்துக்கள்!//


மிக்க நன்றி ரசிகன் சார்...

ஜெயசீலன் said...

@ நேசன் சார்.
உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயப்பூர்வமான நன்றி...
படம் விஷயத்தில் உங்களுடன் ஒத்துப்போனது எனக்கு ஜிவ்வவ்வ்வ்வ்.....
நண்பர் சிவாஜி எனக்கு ஒரு தூண்டல்(சில நேரங்களில் தட்டிக்கொடுத்தும், பல நேரங்களில் குட்டு வைத்தும்)
பெரும்பாலும் உங்களின் வரிகள் தான் மேற்கோளாக இருக்கும்...
இக்கவிதைக்கு எனக்கு கிடைத்தது குட்டு தான்... அது தான் என்னை பயணப்படச் செய்கிறது...
நிறைய வாசிக்கச் சொல்லி இருக்கிறார்... அந்த லிஸ்ட்டில் உங்களைத்தான் முதலில் வைத்திருக்கிறேன்(வலைப்பூ எனும்போது) ...
இனி கொஞ்சம் தேநீர்... நிறைய வாசிப்பு....
மறுபடியும் நன்றி நேசன் சார்...

ஷஹி said...

பிரிவு... தற்காலிக மரணம்!
தினந்தோறத் துயரம்!
நிமிட முள்ளின் நிரந்தரக் குத்தல்!
நாடும் நெஞ்சத்தின் நித்திய வேதனை!
இறப்பு எளிதாக்கும் ஒத்திகை!

பாராட்ட வார்த்தைகளுக்குப் பஞ்சமேற்பட்டு விட்டதால் என்னுடைய ஒரு கவிதை(!) யின் சில வரிகளையே பின்னூட்டமாக்கி விட்டேன்...அபியிடம் நான் இந்தக் கவிதையை சிலாகித்ததில் அவரும் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார்..பார்க்கலாம் அவர் என்ன comment கொடுக்கிறார் என்று! ஆனாலும் ரொம்பவே அசத்துறீங்க ஜெயசீலன்.

ஜெயசீலன் said...
This comment has been removed by the author.
ஜெயசீலன் said...

///ஷஹி said...
பிரிவு... தற்காலிக மரணம்!
தினந்தோறத் துயரம்!
நிமிட முள்ளின் நிரந்தரக் குத்தல்!
நாடும் நெஞ்சத்தின் நித்திய வேதனை!
இறப்பு எளிதாக்கும் ஒத்திகை!

பாராட்ட வார்த்தைகளுக்குப் பஞ்சமேற்பட்டு விட்டதால் என்னுடைய ஒரு கவிதை(!) யின் சில வரிகளையே பின்னூட்டமாக்கி விட்டேன்...அபியிடம் நான் இந்தக் கவிதையை சிலாகித்ததில் அவரும் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகிவிட்டார்..பார்க்கலாம் அவர் என்ன comment கொடுக்கிறார் என்று! ஆனாலும் ரொம்பவே அசத்துறீங்க ஜெயசீலன்.///


இந்த பாராட்டிற்க்கு உழைத்திருக்கிறேனா என்று தெரியவில்லை ஷஹி... இருந்தாலும் என்னை உங்களின் பின்னூட்டங்கள் வெகுவாக ஊக்குவிக்கிறது... உங்களின் பாராட்டுதலுக்கு ஏற்றார்போல இனியாவது எழுத முயற்சிக்கிறேன்... மிக்க நன்றி ஷஹி . நானும் அபி சாரோட பின்னூட்டத்திற்காக காத்திருக்கிறேன்...

சொல்ல மறந்திட்டேன்... மேல் சொன்ன உங்களின் கவிதையும் அற்புதம்...

விமலன் said...

வணக்கம் சார்.நல்ல கவிதை. பிரிவைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் சந்தோஷ நினைவுகளை யார் சொல்ல?

விமலன் said...

வணக்கம் சார்.நல்ல கவிதை. பிரிவைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் சந்தோஷ நினைவுகளை யார் சொல்ல?

ஜெயசீலன் said...

//விமலன் said...
வணக்கம் சார்.நல்ல கவிதை. பிரிவைப் பற்றி மட்டுமே சொல்லிக் கொண்டிருந்தால் சந்தோஷ நினைவுகளை யார் சொல்ல//

நன்றி விமலன் சார்... விரைவில் முயற்சிக்கிறேன்...

சிவாஜி சங்கர் said...

மன்னிக்கவும் நண்பா.. தாமத்திற்கு வருத்தங்கள்..
இணையமற்ற சூழல் காதலி பிரிவை விட கொடுமையை இருக்கிறது..! ;)
கவிதை நல்லா இருக்கு., எனக்கு அன்பளித்ததற்கு நன்றிகள்.. :)
நிறைய எழுதுங்க.. உங்கள் தொடர் பதிவுகளை எதிர்வேண்டி....
--
தீரா ப்ரியங்களுடன்..

சிவாஜி சங்கர்..

Abhi said...

கவிதைக்கு கவிதை புது இலக்கிய அவதாரம் எடுக்கும் கவி புருஷனே !
இடைவெளி அதிகம் விடுகிறாய் என நான் குறப்பட்டதுண்டு...ஒவ்வொரு இடைவெளிக்கும் இத்தனை முன்னேற்றமென்றால் காத்திருக்க நாங்கள் தயார் !

"சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ???"

இது என்ன வரிகளா?
இல்லை வரிக்குவியலா?
வார்த்தைகளில்
ஒலி வடிவம்
கேள்விப்பட்டிருக்கிறேன்!
உன் வார்த்தைகளில் தான்
வலி வடிவம் பார்க்கிறேன்!

உன் நட்பு
எனக்குப் பெருமை!

ஜெயசீலன் said...

//சிவாஜி சங்கர் said...
மன்னிக்கவும் நண்பா.. தாமத்திற்கு வருத்தங்கள்..
இணையமற்ற சூழல் காதலி பிரிவை விட கொடுமையை இருக்கிறது..! ;)
கவிதை நல்லா இருக்கு., எனக்கு அன்பளித்ததற்கு நன்றிகள்.. :)
நிறைய எழுதுங்க.. உங்கள் தொடர் பதிவுகளை எதிர்வேண்டி....
--
தீரா ப்ரியங்களுடன்..

சிவாஜி சங்கர்..//


நன்றி நண்பா...

ஜெயசீலன் said...

@அபி
உங்களின் பாராட்டு என்னை இன்னும் நன்றாக எழுத ஊக்கப்படுத்துகிறது...
நன்றி பின்னூட்டத்திற்கும் தொலைபேசி வாழ்த்திர்க்கும்...

பத்மா said...

ஹ்ம்ம் பிரிவு வேண்டும் ஜெயசீலன் ..இது போல் கவிதைகள் வெளிவர.. சிவாஜிக்கு அர்ப்பணித்தது மிக்க மகிழ்ச்சி ..
பிரிவின் துயர் தீர்ந்து வெகு விரைவில் இதழ் பட வாழ வாழ்த்துக்கள்.
உங்கள் மாயவரம் நன்னிலம் ரூட்டின் நடுவே மற்றொரு கவிஞர் பாலா இருக்கிறார் ..அவர் வலைப் பூவையும் பாருங்கள் ...கடல்புறா

rbharathi said...

பிரிவு வேதனையானது......உணர்த்திய தோழன் ஜெய்ஸ்-இன் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்.....பிரிவு வலிக்கின்றது....விரைவில் சந்தோஷ நினைவுகளை எழுதுங்கள்......

bharath said...

i know you thorugh rbharathi's profile.
nice thought

ஹரிஸ் said...

நல்ல தமிழில் அழகான கவிதை..வாழ்த்துக்கள்..

SIVA said...

கொண்ணுட்ட தம்பி...

சிந்தியா said...

அறிவாய் என் நாயகி!
நீயென் உப்பு!
நீயென் குருதி!
நீயென் நீர்!
நீயென் சத்து!
நீயென் ஊழ்!
உன் பிரிவு எனக்கு அமிலக்குளியல்!!!
sema varigal jaya wonderful ,............

சிவகுமாரன் said...

நெருஞ்சிமுள் செருப்புகள்
கொடுந்தேளின் விஷம்
தொங்கும் வௌவாலின்
தலைகீழ் கோணம்
ஆகா -- வலியை இதை விட எப்படி சொல்வது.

நாஞ்சில் மனோ said...

//சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ??? //
அவள் அங்கே நல்லா தின்னுட்டு தூங்கிட்டு இருக்கா...:]]

[[கவிதை பூ போன்று அருமை]]

அன்பரசன் said...

//வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போது
இசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்?//

நல்ல வரிகள்.

நிலாமதி said...

வலி உணர்ந்த வாக்கியங்கள் கவிதையாய்.............நன்று. மேலும் தொடர்க. மறு கவிதை காண ஆவல்...
.(அவளுக்கு).....எழுதும் போது இங்கும் பதிந்து விடுங்கள் ( சும்மா ஜோக்குங்க

shammi's blog said...

good one jaya ...keep going congrats..

Ashvinji said...

//தொங்கும் வௌவாலின்
தலைகீழ் கோணமாய்
மாறிவிட்டதடி என் உலகம்!


சவமொன்று போகிறதென
எனைச்சுற்றி
கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!
நானிங்கு சுகமில்லை... நீ??? //


Superb.
படிச்ச பிறகு நானும் இங்கு சுகமில்லை.
எனது பதிவுகளை இன்ட்லி இணைய தளத்தில் படித்து வாக்களித்து வருபமைக்கும், பின் தொடர்வதற்கும் இதய நன்றி.

--
'அன்பே சிவம்' அஷ்வின்ஜி
---------------------------------------------------
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?
----------------------------------------------------
வேதாந்த வைபவம் - www.vedantavaibhavam.blogspot.com
வாழி நலம் சூழ - www.frutarians.blogspot.com

puthuvayal said...

அருமை; ஏக்கம் அருமையாக வெளிப்படுகிறது

யோவ் said...

தங்களுக்கு இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...

அப்பாதுரை said...

மிக நன்று.. வௌவால் கோணம் பிரிவின் குழப்பம் மிகப் பொருத்தம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்... தொடர்ந்து எழுதுங்கள்... எதையேனும் சார்ந்திரு என்ற தலைப்பு முழக்கமும் அருமை.

கார்த்தி கேயனி said...

பிரிதல் வலியை சொல்லும் உணர்ச்சிகரமான கவிதை உங்களுக்கு பாராட்டுக்கள்

Ramani said...

காதலன் பிரிவை மிகத் தெளிவாக
உணரச் செய்திருக்கிறீர்கள்
அதிலும் இறந்து கிடக்கிற
மனத்தின் பிணவாடை அறிந்து
சுற்றும் கழுகின் உவமை
வித்தியாசமானது
நல்ல படைப்பை உணர்ந்த சுகம்
தொடர வாழ்த்துக்கள்

gayathri said...
This comment has been removed by the author.
gayathri said...

வாய் நிறைத்த இரையோடுவெறும் கூட்டை வந்துசேரும்தாய்க்குருவிக்குத் தொற்றிக்கொள்ளும்பதற்றம் போல் இப்போது நீ பிரிந்த எனக்கும்!நானிங்கு சுகமில்லை... நீ???

நூற்றியிருபது நாழிகையாய் என்னருகில்உன் சிரிப்பில்லைஉன் அதட்டலில்லைஉன் பரிகாசமில்லைஉன் திட்டலில்லைஉன் உரசலில்லைஉன் எச்சிலில்லைஉனை பிரியும் நேரங்களில்வாழ்வதே கழுவேற்றமாய் இருக்கும்போதுஇசைபட வாழ்வது எவ்வாறு சாத்தியம்?

அறிவாய் என் நாயகி!நீயென் உப்பு!நீயென் குருதி!நீயென் நீர்!நீயென் சத்து!நீயென் ஊழ்!உன் பிரிவு எனக்கு அமிலக்குளியல்
சவமொன்று போகிறதெனஎனைச்சுற்றி கழுகுகள் வட்டமிடத்துவங்கிவிட்டன!!!நானிங்கு சுகமில்லை... நீ???

mr.jay these lines are extremly super,i waiting 4 your another one

ரேவா said...

கவிதை ரொம்ப உணர்வு பூர்வமாக இருந்தது சகோ...தலைப்பே என்னை மிகவும் கவர்ந்து விட்டது....இந்த தலைப்பை நானும் என் சிந்தனைக்கு பயன்படுத்திக் கொள்ளலாமா?....

ஜெயசீலன் said...

நன்றி
ரேவா!
கண்டிப்பாக
சகோ!