Friday, March 11, 2011

ஒரு வியாபாரியும் அவரின் பெருமூச்சும்


நரைத்திருந்த தாடியிலும்
நலங்கெட்டக் கண்களிலும்
இளைத்தக் கன்னங்களிலும்
லேசாய் பருத்து
லேசாய் வளைந்திருந்த முதுகிலும்
வண்டியிழுக்கையில் வெளிப்படும்
வைக்கோல் நரம்புகளிலும்
ஒட்டியிருந்தது அவரின் முதுமை...


கிளம்பிவிட்ட பேருந்தின்
ஒரு ஜன்னலுக்கு
திடிரென முளைத்திருந்த
கரத்தினைக் கண்டதும்,


தனை விடுத்து எங்கோ செல்லும்
தாயின்பின்னோடும் மழலையைப் போல

கூம்புக் காகிதத்தில் 
சுவைபொருள் நிரப்பி
கால்களில் இளமை சுரந்து

அவசரமெடுத்து
ஜன்னல் அடைந்து
பண்டம் கொடுத்து
அவ்வேகத்தில் பேரமும் கடந்து
கிடைத்ததை அடைந்து
கல்லாவில் போட்டதும்
அவரிடமிருந்து வெளிப்பட்ட பெருமூச்சு என்னிடம் சொன்னது...


அவருக்குச் சாதிக்காத
ஒரு மகனிருக்கிறான் என்று!


இல்லையில்லை


சாதித்த மகன்
கைவிட்டுவிட்டான் என்று!


இல்லையில்லை

அவருக்கு திருமண
வயதில் ஒரு மகளிருக்கிறாள் என்று!

இல்லையில்லை

அவரின் மகளின் குழந்தைக்கு
ஒரு பொம்மை பரிசளிக்க என்று!

இல்லையில்லை

அவரின் மனைவிக்கு 
அடுத்தநாள் பண்டிகைக்கு
ஒரு புடவை வாங்கித்தர என்று!


இல்லையில்லை


இறந்துவிட்ட மனைவியின் படத்திற்கு 
ஒரு சந்தன மாலை அணிவிப்பதற்கு என்று!

இல்லையில்லை

அவர் யாருக்கும் 
அடிமையாக இருக்கவில்லை என்று!


இல்லையில்லை


அவர் யாரன்பிற்கோ
அடிமையாக இருக்கிறார் என்று!


இல்லையில்லை

அவருக்கு அன்றிரவின்
சாராயத்திற்குப் பணமில்லை என்று!


இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!!
அதுகணம் எனை நோக்கிய
அவரின் தீர்க்கமானப் பார்வை சொன்னது
அவருக்கு அதுதான் தொழில் என்று!!!


17 comments:

டக்கால்டி said...

Super Sir...

SIVA said...

Nalla kavithai Thambi
vazhakkam pola arumai

kamal(Flex/Flash Developer) said...

மச்சான் ம்ம்ம்ம் ... இன்னும் எதிர் பார்க்கிறான்...

sudhakar said...

super sir
Nalla kavithai

shammi's blog said...

hmmm ...good ...

Thenu said...

ரொம்பவே நல்லா இருக்கு ஜெயா.. வார்த்தைகள் தேர்வும் அதற்கான படிமமும் ரொம்ப பிடிச்சிருக்கு.. பயணப்பட மீண்டும் நீங்கள் துவங்கி இருக்க, உடன் வர நாங்களும் தயார் ஆகிவிட்டோம்.. :)

ரசிகன்! said...

one of ur best!
beautiful jaya!
i like it..

நிரூபன் said...

நரைத்திருந்த தாடியிலும்
நலங்கெட்டக் கண்களிலும்
இளைத்தக் கன்னங்களிலும்
லேசாய் பருத்து
லேசாய் வளைந்திருந்த முதுகிலும்
வண்டியிழுக்கையில் வெளிப்படும்
வைக்கோல் நரம்புகளிலும்
ஒட்டியிருந்தது அவரின் முதுமை...//

வணக்கம் சகோதரம், எப்படி நலமா?
ஆரம்பத்தில் வார்த்தைகளை அழகாக கோர்த்திருக்கிறீர்கள்.


//தனை விடுத்து எங்கோ செல்லும்
தாயின்பின்னோடும் மழலையைப் போல//

இவ் இடத்தில் நீங்கள் உருவகிக்கும் அணியின் வரணனை அளப்பரியது.

//இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!//

இவை கவிதைக்கு உறுதி சேர்க்கும் வரிகள்.
அழகான தமிழில், எளிய நடையில் அனைவரையும் கவரும் வண்ணம் ஒரு வியாபாரியைப் பற்றிய நம்பிக்கை மிகு வரிகளையும், அவரின் உறுதியான உழைத்து வாழ வேண்டும் என்ற வைராக்கியத்தையும் கவிதையில் கோர்த்திருக்கிறீர்கள்.

ஒரு வியாபாரியும் அவரின் பெருமூச்சும்- நம்முள் வாழும் எத்தனையோ தந்தைமாரின் உடலுழைப்பின் வெளிப்பாட்டின் பிரதிபலிப்பு!

mohana priya said...

sir fantastic lines to show the hard work

rbharathi said...

mmm....nalla irukku....good thozhare...

gayathri said...

தனை விடுத்து எங்கோ செல்லும்
தாயின்பின்னோடும் மழலையைப் போல


இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!!
அதுகணம் எனை நோக்கிய
அவரின் தீர்க்கமானப் பார்வை சொன்னது
அவருக்கு அதுதான் தொழில் என்று!!!

gayathri said...

இல்லையில்லை
அவருக்கு அன்றிரவின்சாராயத்திற்குப் பணமில்லை என்று!

இல்லவேயில்லையென
அனைத்தையும் ஒதுக்கிவிட்டு
அவர் அடித்த மணிச்சத்தம் சொன்னது
அவர் உழைக்கிறார் என்று!!!
அதுகணம் எனை நோக்கிய
அவரின் தீர்க்கமானப் பார்வை சொன்னது
அவருக்கு அதுதான் தொழில் என்று!!!
i like these lines.
mr.jay sir,its realy think about,the feel of hardworking people.

ஷஹி said...

கவிதைகளுக்கான கருவும் முதல் வரியும் எங்கிருந்து கிடைக்கின்றன உங்களுக்கு?பிரமாதம் ஜெயசீலன்..

Anonymous said...

hai.super sir.

@deepu@ said...

அபரிமிதமான சிந்தனை மிக அருமை வாழ்த்துக்கள்

@deepu@ said...

அபரிமிதமான சிந்தனை மிக அருமை வாழ்த்துக்கள்

kavithai said...

நல்ல கருத்துடைய கவிதை. நல்லது ஆனால் ஏதோ....ஒன்று குறை போல உள்ளது.. ஒன்று மிக நீண்டுவிட்டது. எல்லாவற்றையும் ஒன்றாகச் சொல்லிவிடும் துடிப்பு தெரிகிறது. அது குறுக்கப்பட்டால் நன்றாக இருக்குமோ! ஒரு கட்டுரைக்குரிய விடயங்கள் இக்கவிதையில் அடங்கியுள்ளது போல நான் உணர்கிறேன் .ஆயினும் நல் வாழ்த்தகள் சகோதரா!
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com