Wednesday, September 14, 2011

முத்தம்


எனக்குள் நான் 
உன்னைப் பருகிக்கொள்ளவும்
உனக்குள் நீ 
என்னைப் பருகிக்கொள்ளவும்
கிடைத்திருக்கும்
மதுக்கோப்பை - முத்தம்!

******அப்படித்தான்!
ம்...
அப்படியே
உறிஞ்சி
எனக்குள்ளிருக்கும் உன்னை
மேலெழுப்பு...
அவளுக்கும் ஒன்று தரவேண்டும்!!!

******முத்தக் 
கணங்களில்
சிரிக்காதே...
மூச்சு திணறுகிறது காதல்!
மூர்க்கமாகிறது காமம்!

******


இதழ் ஒற்றி எடுப்பதாயிருந்தால்
நொடிக்கொன்று வேண்டும்...

நெடிய முத்தமென்றால்
நாம் பொம்மையாகும் வரை வேண்டுமெனக்கு!

******ஆயிரமாவது முத்ததிற்குப் பிறகு
அவ்ளோதான் இன்னைக்கு - என 
சொன்னதில் விளைந்த 
மௌனத்தை உடைக்க
தற்செயலாய்

முத்தத்தின் சுவையென்ன
எனக்கேட்டாய் நீ...
சோதித்துப் பார்ப்போமா
எனக்கேட்டேன் நான்...
சிரிக்கத்துவங்கிவிட்டது காதல்!

******நாணத்தோகை
களைந்துவிடு
கரும்பு சாப்பிடவேண்டுமெனக்கு!

******


காமம் தடவிய 
முத்தப் பண்டங்கள்
நமக்கு குழந்தைகள் செய்யும்...
காதல் மட்டும் ஊற்றிய 
முத்த பாணங்கள்
நம்மையே குழந்தைகளாக்கும்...

வா குழந்தைகளாவோம்!
******


25 comments:

Nafil said...

Vaa kulandhaigalaaguvom

kovai sathish said...

நீ முத்த ராஸ்கல்...

MANO நாஞ்சில் மனோ said...

இனிய கவிதை வா குழந்தையாவோம்....

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,

இன்று தான் உங்களின் வலைக்கு முதன் முதலாக வந்தேன்.

முத்தம் பற்றிய தித்திப்பான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.

நிரூபன் said...

முத்தத்தின் சுவையென்ன
எனக்கேட்டாய் நீ...
சோதித்துப் பார்ப்போமா
எனக்கேட்டேன் நான்...
சிரிக்கத்துவங்கிவிட்டது காதல்!//

சான்ஸே இல்லை பாஸ்..

காதலை உயர்வு நவிற்சி அணியாக்கி, முத்ததின் சுவையினை உச்சத்தில் சொல்லியிருக்கிறீங்க.

Ramani said...

படங்களுடன் முத்தக் கவிதைகள் அனைத்தும்
நிஜமாகவே முத்துக்கள்
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்

கோகுல் said...

முத்தக்கவிதை முத்துக்கவிதை!
வாழ்த்துக்கள்!
தொடருங்கள்!

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் நண்பா.
உங்களை இன்றைய என் பதிவினூடாக பறிமுகப்படுத்தியுள்ளே.

உங்களுக்கு ஓய்வு நேரம் கிடைக்கும் போது, வாங்களேன்.

http://www.thamilnattu.com/2011/09/03.html

ஐடியா மணி ,Dip in MK,Blol,Msc,Frc,Rmkv,Bmw said...

அழகான சுவையான கவிதை!

கவி அழகன் said...

அஹா என்ன ரம்மியமான முத்த வரிகள்
காதல் பாடம் முத்த பாடம் திதிக்குது

பிரணவன் said...

முத்தங்களுக்குள் மொத்த காதலையும் அடக்கிவிட்டீர்களே சகா. . .அருமையான கவிதை. . .
முத்தத்தின் சுவையென்ன எனக்கேட்டாய் நீ... சோதித்துப் பார்ப்போமா எனக்கேட்டேன் நான்... சிரிக்கத்துவங்கிவிட்டது காதல்! என்ன வரிகள்!!!!!!அருமை. . . .

பாரத்... பாரதி... said...

காதல் ததும்பி ததும்பி வழிகிறது உங்கள் கவிதை வரிகளில்...

ஜெயசீலன் said...

@நஃபில் : மச்சான் வாடா சௌக்ய்மா???

@கோவை சதிஸ் : வாங்க வாங்க! வந்து வாழ்த்தியமைக்கு நன்றி கவிஞரே!

@நாஞ்சில் மனோ : தங்களின் வருகைக்கு நன்றி சார்!

@நிருபன் : சார் உண்மையை சொல்லனும்னா... நீங்க உங்க தளத்தில் அறிமுகப்படுத்தும் பதிவர்களைப் பார்த்து, என்னையெல்லாம் அறிமுகப்படுத்த மாட்டிங்களான்னு ஏக்கப்பட்டிருக்கேன்... அது இவ்ளொ சீக்கிரம் நடக்கும்னு நான் நினைச்சுகூட பாக்கல்... நன்றின்னு ஒரு வார்த்தை போதாது சார்...

@ரமணி சார் : தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி சார்.

@கோகுல், ஐடியா மணி,கவியழகன், பாரத்...பாரதி, பிரணவன் : முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே.

kabilan said...

முத்தானா முத்தங்கள் இவை நண்பரே. தொடரட்டும் உங்கள் முத்தங்கள்...

ஜெயசீலன் said...

நன்றி கபிலன் அண்ணே...

kamal(Flex/Flash Developer) said...

Ayokeya payale......

Jeni said...

Jaya kalakitenga. chanceye ila.unga kavidhaik yar karanam,jaya??????????

Anonymous said...

Jaya kalakitenga. chanceye ila.unga kavidhaik yar karanam,jaya??????????

ஜெயசீலன் said...

கவிதைகளுக்கு யாராவது காரணமா இருக்கனுமாங்க ஜெனி!

Anonymous said...

kavidhaila kaadal kadale oduthey, yengay utreduthathu yengay samgamika pogerathu.

ஜெயசீலன் said...

அன்பின் ஜெனி! நல்வரவு... இந்த உலகமே காதலால் தான் இயங்கிக்கொண்டிருக்கிறது... இதுமாதிரி கவிதைகளை காதலிக்காதவர்கள் கூட எழுதிவிட முடியும்... தேடிகிட்டு இருக்கேன்.. கிடைத்துவிடுவாள்...

Anonymous said...

veraivil kidaika vazhthukal,jaya

சீனுவாசன்.கு said...

நம்ம சைட் பக்கமெல்லாம் உங்க காத்து வீசாதோ?
இருக்கட்டும்.இருக்கட்டும்!

jebesteena said...

awesome!!

Anonymous said...

Superb..!!!
great one..!!!